பிரதான சாலை அருகில் இருக்கும் தனி வீடுகள்தான் பெரும்பாலும் கொள்ளையடிக்க தேர்ந்தெடுக்கி்ன்றனர். ஓரிரு நாட்கள் வீட்டை ஆள்மாற்றி ஆள் கண்காணிக்கிறார்கள். வீட்டின் மொத்த ஜன்னல், கதவு, சுற்றி உள்ள புதர்கள், மரங்கள், அவசரத்தில் பதுங்க இண்டு இடுக்குகள், தப்பி ஓடி சாலையை அடையும் சுலபமான வழிகள், என எல்லாம் துப்புரவாக பார்த்துவிடுவார்கள்...
கொள்ளைக்கு நாள் குறித்த அன்று, இரண்டாம் ஆட்டம் படம் பார்க்க சென்றுவிடுவார்கள். படம் முடித்தும் நேராக அந்த வீட்டின் அருகில், முன்பே தேர்தெடுத்த மறைவில் கூடி, தூங்கிவிடுவார்கள்!!! தலைவனாய் செயல்படுபவன் மட்டும் கொஞ்சம் கனமான கல்லை கையில் வைத்துக்கொண்டு தூங்குவான்...
பின் இரவு இரண்டு மணிக்கு மேல் என்பது எந்த ஒரு மனிதனையும் உறக்கம் வெற்றிகொள்ளும் நேரம். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் கைகள் வலுவிழந்து கல் நழுவி விழும். அதுதான் வேட்டைக்கு புறப்படும் நேரம்...
தன் கூட்டாளிகளை எழுப்பிகொண்டு, நேராக அந்த வீட்டின் கதவை தட்டுவார்கள், சிலசமயம் உடைத்தேவிடுவார்கள். உள்ளே சென்றதும் முதலில் ஆண்கள் அனைவரையும் கட்டிவிடுவார்கள். அவர்களின் உயிரை பணயம் வைத்து அந்த வீட்டு பெண்களை -வயது வித்தியாசம் பார்க்காமல் - கற்பழித்துவிடுவார்கள்!!!!
பிறகு அவர்களையும் கட்டிவிட்டு நிதானமாக கொள்ளையடிக்கபடும்.
அந்த குடுபத்திற்கு கொள்ளை போகும் பொருட்களைவிட, குடும்ப மானம் முக்கியமாகிறது. அவர்களுக்குள்ளேயே அழுது ஆற்றிகொள்வார்களேயன்றி போலீஸிற்கு போகமாட்டார்கள், அதற்குதான் அந்த கற்பழிப்புகள்...
இப்படி தன் கண் முன்னாலேயே மகளின் கற்பு சூறையாடப்பட்ட ஒரு தந்தை, கொள்ளை நடந்த சில மணிகளிலேயே, கொள்ளையடித்துபோக வீட்டில் இருந்த நகை பணத்தை மடியில் கட்டிக்கொண்டு துணைக்கு நம்பிகையான சில நண்பர்களுடன் காவல் நிலையம் வந்து அனைத்தையும் மேஜை மேல் கொட்டி, நடந்ததை சொல்லி, '....இதெல்லாம் நீங்களே வெச்சுகோங்கய்யா, எனக்கு அந்தத் தே பயலுவள புடிச்சு குடுத்துருங்க.... அவனுகளை மாறுகால் மாறுகை வாங்கணும்...... அப்போதான் ஆறும்.....' என்றார்.....
இப்படி கொள்ளை அடித்தும் அவர்களின் அடுத்த நடவடிக்கை, ஊரை விட்டு ஓடுவது.... அந்த தந்தையையும் அவரின் நண்பர்களையும் அப்போதே ஜீப்பில் அள்ளி போட்டுக்கொண்டு வெளியூர் பேருந்துநிலையங்களில் தேட, இருவர் மட்டும் அகபட்டார்கள்...
அதற்குபின் சட்டம் தன் கடமையை செய்ததா, அல்லது அந்த தந்தையின் மனம் ஆறியதா என்பது இனொரு நாள் சொல்கிறேன்...
அற்ப பணத்திற்காக உலகின் பார்வைகே வராமல் இப்படியும் சில குடும்பங்கள் சிதைவதை ஜீரணிக்க முடியவில்லை....
March 30, 2009 at 7:34 PM
கொள்ளையடித்துபோக வீட்டில் இருந்த நகை பணத்தை மடியில் கட்டிக்கொண்டு துணைக்கு நம்பிகையான சில நண்பர்களுடன் காவல் நிலையம் வந்து அனைத்தையும் மேஜை மேல் கொட்டி, நடந்ததை சொல்லி, '....இதெல்லாம் நீங்களே வெச்சுகோங்கய்யா, எனக்கு அந்தத் தே பயலுவள புடிச்சு குடுத்துருங்க.... அவனுகளை மாறுகால் மாறுகை வாங்கணும்...... அப்போதான் ஆறும்.....' என்றார்....///
தாங்க முடியாத துயரம் !!1
March 30, 2009 at 7:35 PM
கதைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
March 31, 2009 at 8:04 AM
நன்றி நண்பரே.....
ஆனால் இது கதை அல்ல நிஜம்!!!!