மாத பிதா குரு தெய்வம்....


ஏதோ ஒரு காலம்தொட்டு அனர்த்தம் செய்யப்பட்ட வாக்கியங்களில் இதுவும் ஒன்று...


தந்தை குரு தெய்வத்தை எல்லாம் பின்தள்ளி முன்நிறுத்தபடுவது அன்னை. இவளே முதலில் வணங்கவேண்டியவள் என்றேல்லாம் தலைமுறையாக போதிக்கபடுபவை...


அன்னை வணங்கவேண்டியவர்களுள் ஒருத்திதான்.... அதை தப்பென்று சொல்லவில்லை..... ஆனால் இந்த வாக்கியங்கள் நமக்கு உணர்த்துவது வேறொன்றை..... அதை தான் சொல்ல விரும்புகிறேன்...


ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் உணர்வது தாயை...


அந்த தாய்தான் அக்குழந்தையின் தகப்பான் இவனென்று காட்டுபவள்...


ஒரு நல்ல தகப்பனின் பொறுப்பு அக்குழந்தையை நல்ல ஆசிரியனிடம் கொண்டுசேர்பது...


சிறந்த குருவினால்தான் கடவுளை அடையும் மார்க்கத்தை போதிக்கமுடியும்....


இதைதான் முறையே மாத பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள்....


மாத பிதா குரு மூவரும் ஒருவனுக்கு சிறந்தவர்களாக அமைய பெற்றால் அவன் சுலபமாக தெய்வத்தை அடையலாம் என்பது தான் இது உணர்த்துகிறது...


தாய்குலத்தின் ஆதரவுக்காக ஏதோ ஒரு காலத்தில் இதன் அர்த்தத்தை மாற்றி வழிவழியாக மனங்களில் பதித்துவிட்டார்கள்....


இதேபோல் இனொரு பழமொழியும் உண்டு.... அதை பின்னர் பார்போம்....


அதற்கு முன் இதன் பொருள் தெரிகிறதா பாருங்கள்....


வைத்தியரிடம் (தமிழில் டாக்டர்!) வந்த ஒருவன் "ஐயா, கோலிரண்டு பற்றி மூவிரண்டு போகையில் ஐந்து தலை நாகம் ஒன்று அழுத்தி கடித்ததையா, என்ன செய்ய? "


அதற்கு வைத்தியர் "பத்துரதன், புத்திரனின், மித்துருவின், சத்துருவின், பத்தினியின், காலை வாங்கி தேய், அது தான் மருந்து"


புரிகிறதா!!!!!

1 Response to "மாத பிதா குரு தெய்வம்...."

  1. தங்க முகுந்தன் says:
    July 19, 2009 at 7:48 PM

    அருமை! எனக்கு உங்கள் புதிர் சத்தியமாகப் புரியவில்லை! இப்போது இங்கே அதிகாலை 4.45 - டொச் படிக்கப் போவோமா? உதைப் போட்டுத் துளாவுவோமா? வாறன் பிறகு!

Post a Comment