கடவுளை தேடி... -5

கடந்த அத்யாயத்தில் எழுதியவற்றின் சாத்தியங்களில் சந்தேகம் உள்ளவர்களுக்கு  ஒரு சம்பவத்தை பகிர்கிறேன்..

இரண்டாம் உலக யுத்தம் நடந்த சமயத்தில், தெற்கு பசிபிக் கடலில், உலக நாகரிகத்தின் நிழல் கூட படியாத ஒரு தீவினில், நேசப்படை, ஆயுத தளவாடங்களை தேக்கிவைக்க உபயோகித்தனர். மனிதர்கள், விமானத்தில் வருவதையும் போவதையும் அந்த தீவில் வாழ்துவந்த பழங்குடி இனத்தவர் கவனித்தனர். புதிய மனிதர்களின் உடை, ஆயுதங்கள், பறக்கும் ஊர்திகள் எல்லாம் அந்த பலகுடியினரின் கற்பனையில் கூட இடம்பெறாதவை.

போர் முடிந்ததும் தளவாடங்கள் யாவையும் எடுத்துக்கொண்டு நம்மவர்கள் ஊர் திரும்பி சில காலங்களுக்கு பின், அங்கு சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பு காத்திருந்தது.

அங்கிருந்த பழங்குடியினர், வானத்தில் இருந்து வந்த மனிதர்கள் கடவுளர் என்று நம்பிக்கொண்டு இருதனர். வானத்தில் ஏதேனும் விமானம் தென்பட்டால் அதை விழுந்து வணங்கி வந்துள்ளனர். அந்த தீவில் கிடைக்கும் மூங்கில், நார், கோடி போன்றவைகளைகொண்டு விமானம் போல் மாதிரியை உருவாக்கி, இதை கண்டு கடவுளர் மீண்டும் நம் தீவிற்கு வரமாட்டார்களா என்று தினம் வானம் பார்த்து காத்திருந்தனர்.

இது தான் மனித மனம்...

சில நுற்றாண்டுகளுக்கு முன்புவரை, தொலைக்காட்சி என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்... அந்த காலகட்டத்தில், அதை பார்த்திருந்தால் என்னவென்று சொல்லிருபோம்..... தொலைக்காட்சி என்ற??
மாய கண்ணாடி என்றுதானே சொன்னோம்!!!!!!!!

சிவலிங்கத்தின் உருவகத்தை பற்றி எங்கேனும் படித்தோ, கேள்விபட்டோ இருகிறீர்களா?

ஆற்றல் உருவாக்கும், விசையை உருவாக்கும், சக்தியை உருவாக்கும் யாவும் இந்த வடிவத்தில்தான் இருக்கும்!!! கவனிக்க, "சக்தியை உருவாகும்" - சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இலையேல் சக்தி இல்லை என்று சொல்வது மரபு. சரி, விசயத்திற்கு வருவோம். ஆற்றலை உருவாகும் யாவும் இந்த வடிவத்தில்தான் இருக்கும் என்று சொல்லுவதைவிட, இந்த வடிவத்தில் இருந்தால்மட்டுமே அங்கு ஆற்றல் உருவாகும் என்பதுதான் நிதர்சனம். நம் TVS XL என்ஜின் முதல் அணுஉலைவரை அனைத்தும் லிங்க வடிவத்தில் இருப்பது பார்த்தலே புரியும்.

கருவறையில் லிங்கம் இருக்கிறது, மேலே கோபுரம். கொஞ்சம் யோசித்துபாருங்கள் மக்களே. கோபுரங்கள், இன்றைய ராக்கெட்-ஐ நினைவுபடுத்தவில்லையா? ராக்கெட்டின் (கோபுரம்) கீழே என்ஜின(சிவலிங்கம்), அப்படியாக ஏன் இருக்ககூடாது!!?? இதை பற்றி ஆராய்ச்சி செய்ய நம்மவர்கள் யாரேனும் ஆராயலாம்..


முக்கியமான விஷயம், கோபுரங்களுக்கு "விமானம்" என்றும் பெயர் உண்டு........

கோவில்களை பற்றி என்னிடம் வேறொரு கோட்பாடும் இருக்கிறது, அதை மற்றொரு தருணத்தில் பகிர்கிறேன்...