அணையா நெருப்பு....

சில நண்பர்களின் விருபதிர்கிணங்கி கமல்ஹாசனின் 'அணையா நெருப்பு', உங்கள் பார்வைக்கு...

கடவுளை தேடி...... - 1

கடவுளை தேடி....

இதை பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த 'எவனோ ஒருவனின் டைரி'. ஆனால் எங்கெங்கோ பயணம் செய்துகொண்டிறுகிறேன்...
இனியேனும் இதிப்பற்றி மட்டும் எழுதலாம் என்று ஆயதம் ஆயிருக்கிறேன்..
பார்ப்போம்...

போகிற போக்கில் ஒரு கதை சொல்கிறேன்...

விரிவான கதை இல்லை... கதை சுருக்கம்... இல்லை... கதை சாரம்.... எதுவோ ஒன்று...

பூமியில் வாழும் மனிதர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் மேலான, விண்ணில் ஏதோ ஒரு கிரகத்தில் வாழும் மனிதர்கள் நம் பூமிக்கு வந்தார்கள். அவர்களால் பூமியில் பல நன்மைகள் விளைந்தன. அவர்கள் நம்மவர்களுக்கு பல விதத்தில் உதவிகள் புரிந்தனர். பல நல்ல விசயங்களை போதித்தனர். இருபினும் அவர்கள் நம்மை அடிமை படுத்தி ஆளவேண்டும் என்று நினைக்கவில்லை.

நம்மை ஆள்வதோ, நம் தேவைகளோ, நமது பூமியோ அவர்களுக்கு அற்பமாக இருக்கலாம், அதனால் நமிடம் இருந்து அவர்கள் எதையும் எதிர்பார்கவில்லை. இந்த செயல்கள் அவர்களை, கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்தது. அவர்களின் உடல் அமைப்பும் நம் மனிதர்களின் உடல் அமைப்பை ஒத்திருந்ததால், பலர் அவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்தும் வைத்தனர்.

அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், பறக்கும் வாகனங்கள், யாவும் நம்மவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தின. இவைகளுக்கு மேல் அவர்களுக்கு நம் மனதில் நினைப்பதை படிக்கும் ஆற்றலும் இருந்தது. இது அவர்களின் மேல் இன்னும் பயம் கலந்த மரியாதையை உருவாகியது.

அவர்கள் நம் பூமிக்கு வந்து சென்றனரே தவிர அவர்கள தங்குவதற்கு ஏதுவான வசிப்பிடமாக நினைக்கவில்லை. இப்படியாக காலம் நகர்ந்துகொண்டு இருக்க.
ஒருநாள், விண்ணில் புதிதாக மூன்று விண்வெளி ஓடங்கள் மிதந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் மலை போன்ற பெரிதாய். தங்க நிறத்தில் ஒன்று, வெண்மையாய் வெள்ளி போன்று ஒன்று, மற்றொன்று கருமையாய்.

அந்த விண்வெளி ஓடங்களில் இருந்து விகாரமாய், முரட்டுதனமான சில மனிதர்கள் பூமிக்கு வந்து இறங்கினார்கள். இவர்கள் கொடுமைக்காரர்கள், மற்ற கிரகவாசிகளை அழித்தோ, அடிமை செய்தோ அந்த கிரகத்தை தம் கட்டுபடிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள். இவர்களிடதும் அதி நவீன ஆயுதங்களும், ஒளியை விட வேகமாக செல்லும் வாகனங்களும் உண்டு. இவர்கள் போன்றவர்களும் விண்வெளியில் இருகிறார்கள் என்று நமவர்களுக்கு முனமே தெரியும், ஆனால் இப்படி எதிர்பாராமல் வருவார்கள் என்று நினைக்கவில்லை.

வந்தவர்கள் நேரடியாக தாக்குதலில் இறங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களுக்கு முன்னே நம் ஆயுதங்கள், ஈடிகளுக்கு முன் குண்டூசிகள் போல் இருந்தது. விரட்டி அடிக்க பட்டோம். இவர்களுடன் மோத, இவர்களுக்கு சம பலம் பொருந்திய, நமக்கு உதவும் இனொரு வெற்றுக்ரக வாசிகளால்தான் முடியும் என்று அவர்களை தொடர்பு கொண்டனர்.

முதலில் அவர்களின் ஒரு படை வந்தது. அவர்களுடன் நம் மனிதர்களும் இனைந்து மோதல் வெடித்தது. இருந்தும் நம்மவர்களால் அவர்களின் வெறி தாக்குதலை தாக்குபிடிக்க முடியவில்லை. நமக்கு உதவ வந்த வெற்றுக்ரகவாசிகளும் பின்வாங்கினர்

பின்வங்கியவர்கள், அவர்களின் தலைவரிடம் முறையிட்டனர்... அவர்களின் தலைவர் அதிநவீன, அதீத சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் வந்தார், சிறு புனுருவளுடன் ஏதோ ஒரு 'button' ஐ அழுத்தி அந்த மூன்று ஓடங்கலையும் அளித்தார்... உலகமே அவரை கொண்டாடியது....

எங்கேயோ கேட்ட கதை போல் உள்ளதா??

இது நம் சிவபெருமான், முப்புரங்களை அழித்த கதைதான்...

இதை போல் அணைத்து புராண, இதிகாசங்களுக்கும் ஒரு 'alien' விளக்கம் சொல்கிறார், Eric von danican என்னும் ஜெர்மனியர்..

தேடுதல் தொடரும்...

புத்தகம்...

................
'நீ எம்பிடு பெத்தே?' என்றால் சணப்பி.
'ஆருக்கு கணக்கிருக்கு. எனக்கு மொகம்கூட ஒர்மயில்ல அக்கா. இன்னி ஆரயும் பாத்தாலும் கண்டுபிடிக்க ஒக்காது' என்றால் முத்தம்மை, 'முதல் குட்டிய மட்டும் நல்ல ஒர்மையிருக்கு அக்கா. அது எனக்கு கேறுமிண்ணு நாள் சொப்பனத்திலயும் நெனைக்கில்ல. அப்பம் எனக்கு பதினாறு வயசாக்கும். வயறு கேறி வீக்குயது வரை எனக்கு நம்பிக்கை வரேல்ல. பிரவு ஊணும் இல்ல உறக்கமும் இல்ல. எப்பம் பாத்தாலும் சொப்பனம். பின்ன கரைச்சில் சிரிப்பு. எனக்க அக்கோ, மத்து கேறிப் போச்சுன்னு சொன்னா போருமே. பத்து மாசம் தரையிலயா நிண்ணேன்? பிறவு பிள்ளை பொறந்து வயத்தாட்டி தூக்கி காட்டிணப்பம் எனக்கு சங்கு பொடிட்டிப் போச்சு அக்கா'
'ஏன் உன்னைய மாதிரி இருந்ததோ?'
'எனக்கெங்கிலும் கண்ணு உண்டும். ஒரு கை உண்டும். சோறு இருக்க இடம் பாத்து வாரிதிங்க ஆறுக்க சகாயமும் வெண்டாம். அது ஒரு வரதுல்லா. கண்ணில்லா. கையிலயும் காலிலயும் ஓரோ விரலு மட்டும்தான். கூனுமுண்டு. மாறிலயும் வயதிலையும் அடிச்சுட்டில்ல கரைஞ்சேன். பிடிச்சு அமுக்கி கொல்லணுமுண்ணு நெனைக்கேன். கொரவளையில கைய வச்சா கை அமுங்காது. அய்யோ, எனக்க மக்களேன்னு கெடந்து நெலவிளிச்சேன். ஆப்பூன்னு ஒருத்தன் இருந்தான். அவன் கம்பி எடுத்து அடிச்சான். இப்பமும் சங்கில நிக்குதக்கா பிள்ளை சரீரம். எம்பிட்டு மட்டம் தடவி பாத்தேன். பத்து மட்டம் தடவினா கை வளராதாணு நெனச்சேன் அக்கா. கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தக்கை வெரலு...'
'கொல்ல ஒக்குமோ?' என்றாள் சணப்பி.
'பிள்ளைய வெறுக்கமுடியாது அக்கா. வெறுக்கலாம். அது நம்ம முலைகண்ணில வாய வச்சா பிறவு வெறுக்க ஒக்காது. முலை குடிக்கும்பம் கடிச்சா வலிக்கும் பாத்துக்கோ. அப்பம் அது நம்மகிட்ட என்னமோ சொல்லுயது மாதிரி இருக்கும். அம்மாண்ணூவிளிக்கது மாதிரி. அதுக்கும் பிறவு நம்ம பிள்ளைய வெறுக்கமுடியாது. எனக்க பொன்னு அக்கோ.'
சணப்பி 'உனக்கு அந்த பெயல பாத்தா தெரியுமாட்டி?'
'அதுக்கு இப்பம் பதினெட்டு வயசிருக்கும்லா. எனக்க கண்ணில நிக்குதது அதுக்க சின்ன சரீரமாகும். ஒரு வயசிலயில்லா வெலை குடுத்து தூக்கிட்டு போனாவ. எனக்க பிள்ளியள ஒண்ணையும் பிறவு நான் கண்ணால பாத்திட்டில்ல. ஏழெண்ணம் பொண்ணாக்கும். ஒண்ணையும் நான் கண்டிட்டில்ல. ஆனா ஒன்னு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன். எனக்க பிள்ளைய தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்...'
'உனக்கு நல்ல குட்டி பிறந்திட்டுண்டா?'
'எங்கேண்ணு பிறக்கும்? எப்பமும் வல்ல குருடோ கூனோ தானே அணையவிடுதாக?'
'அதுக்குமொரு யோகம் வேணுமே...'
...................

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' என்ற நாவலின் ஒரு பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. எப்போதும் செல்லும் நூல்நிலயத்தின் உரிமையாளரிடம் 'படித்தால், இரண்டு மூன்று நாட்களாவது மனதை அழுத்திக்கொண்டு இருக்க வேண்டும், அப்படி ஒரு புத்தகம் வேண்டும்' என்று கேட்டதற்கு அவர் கொடுத்த புத்தகம்தான் இது.
பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்துவிட்டதலோ என்னவோ, இந்த கதை அதிகம் அழுத்தவில்லை, ஆனாலும் என்னை கீழே வைக்கவிடவில்லை. அந்த திரைபடத்தை பார்பதற்கு முன்பே இதை படித்திருந்தால் நிச்சயம் என் தூக்கத்தை கேடுத்திருக்கும்.
என்னை முதலில் படிக்கவைத்த பெருமை ராஜேஷ்குமார்ஐ சேரும். கதைகளின் தலைப்பே விகாரமாய் இருக்கும் - 'பஞ்ச வர்ண கொலைகள்', 'கொலை கொலையா முந்திரிக்க'. அவரின் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக அலுக்க ஆரம்பித்தது -இப்போது என blog ஐ போல. ஆரம்ப அத்யாயங்களிலையே முடிவு ஊகிக்க முடிந்தது. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரன் இவர்களும் அப்படியே. பின்னர் சுஜாதா. சுஜாதாவின் கதைகள் எனக்கு அலுப்பு தட்டியதில்லை, ஒவ்வோவுன்றும் ஒவ்வொரு தலத்தில் இருக்கும். முன்னவர்களின் அளவிற்கு அவர் நாவல்களை எழுதி குவிக்கவில்லை.
பாலகுமாரன், நாவல்களை எனக்கு வேறு ஒரு பரிமாணத்தில் தந்தவர். 'மெர்குரி பூக்கள்'லில் இருந்து அவரின் கதைகளை தேடி தேடி படித்தேன். அதுவும், மகாபாரதம் தழுவிய கதைகள் அருமை. அந்த காலகட்டங்களில் கையில் பாலகுமாரன் புத்தகம் இருந்தாலே பெருமையாய் பார்பார்கள்!!! 'கண்மணி தாமரை' ஐ மாய்ந்து மாய்ந்து படித்தேன். அதில் அவர் 'எழுத்து சித்தார்' ஆனபின் அவரின் பக்கமே போவதில்லை.
இந்திரா சௌந்தராஜனின் 'கிருஷ்ணா தாசி' தவறாமல் படிக்கவேண்டிய நாவல். பின்னர் சமூக கதைகளில் இருந்து விலகி அவரின் முதல் மர்ம நாவல், உண்மையிலேயே மர்மமான நாவல்தான். கதையின் வரும் கொலைகளுக்கு காரணமானவர் யார் என்று கண்டுபிடித்தால் நூறு ருபாய் பரிசு என்று அறிவித்திருந்தார். விடை அடுத்த மாத நாவலில் என்று கதையின் முடிவை சொல்லமலே முடித்திருந்தார். நான் அந்த நாவலை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில்!! இன்று வரை அந்த கதையின் முடிவே தெரியாது!!! 'விட்டுவிடு கருப்பா', 'ஆயரம் வேலி நிலம்' மற்றும் சில நாவல்களுடன் அவரையும் நிறுத்திவிட்டேன்.
ஜெயமோகன், ஆதவன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இன்னும் இன்னும்... இவர்களின் எல்லாமே அருமை என்று சொல்லமாட்டேன். தேடி படிக்கவேண்டும்.
கதைகளின் நடை அழகாக இருந்தால் போதும், வெகு சாதாரண கருவை வைத்து கூட புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் செய்யலாம். அதற்க்கும் சுஜாதாவையே உதாரணம் சொல்லலாம், அவரின் கதைகளை படித்தவர்களுக்கு அது புரியும்.
கதைகளை பற்றி பேசும்போது, என்னை பாதித்த கதைகளில் ஒரு முக்கியமான கதை "அணையா நெருப்பு" என்ற சிறுகதை. மிக மிக வித்தியாசமான கதை. அதுவும் எதிர்பாராத ஒருவர் எழுதிய கதை. அந்த கதை படித்தபின் அவரின் மீது இருந்த மரியாதை பல மடங்கு உயர்ந்துவிட்டது. அவர் நடிகர் கமல்ஹாசன். 28.05.2006, ஆனந்த விகடன் இல் வெளிவந்தது.

தமிழக தேர்தல் 2011...

குறிப்பு:என நண்பனின் மகனும், அவனது தந்தையும் - தாத்தாவும் பேரனும் - உரிமையுடன் '..' போட்டு பேசிகொள்வார்கள்... பேரனின் வயது ஐந்து!! தாத்தாவிற்கு அறுவதுக்கு மேல்... 13 ஆம் தேதி காலை, தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த சமயம்...

தாத்தா : டேய்... நாம தோத்துடோம் டா....
பேரன் : ஏன்டா...
தாத்தா : நமக்கு யாரும் ஓட்டு போடலடா...
பேரன் : நீ போட்டியாடா..
தாத்தா : போடேண்டா..
பேரன் : அப்புறம் ஏண்டா தோத்தோம்?
தாத்தா : மத்தவங்க யாரும் போடலடா...
பேரன் : பரவால விடுடா... channel மாத்துடா, cartoon பாக்கலாம்...

ஓட்டு போடுவதற்கு முன்...

சமீபத்தில் எனக்கு வந்த மின்-அஞ்சல், இங்கு உங்கள் பார்வைக்கு...

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க !

ஓட்டு எந்திரத்திற்கு ( அட நம்ம வாக்காளர்கள்தான் ..) ஒரு சின்ன தகவல் ..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை , சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது .
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது ..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது .

ஏனென்றால் ,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ).
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ கிடையாது .

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும் ...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை - ரூ .50,000 கோடிகள் .
( ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான் !)

ஆனால் ... இன்று ..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள் .

மீண்டும் உங்கள் நினைவிற்கு ..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ) .
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது .
- இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது .

- இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது .

-TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன .

இந்தியாவின் No-1 மாநிலம் ( தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை
தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம் / ஒழுங்கு )

நாமும் No-1 தான் ( பிச்சை எடுத்து, இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி, உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது .

நம் மாநிலத்தின் நிலை ??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்கிவிடும் .

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல ..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும் .

இது அநியாய , அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் .

இதில் நாம் தவறிழைத்தாலோ , அடிபணிந்தாலோ , ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் .
உலகம் நம்மை காரி உமிழும் .

சலூன் கடைகாரர்...

ஒரு ஆரம்பபள்ளியில் இரு சிறுவர்கள், நாலும் சொச்ச வயதுகள்...
உணவு இடைவேளையில் அவர்களின் சம்பாசனை...
"டேய்... எனக்கு ஒரு டவுட் டா..."
"என்ற?"
"ஆய் போன நமக்கு ஆயா கழுவி விடறாங்க.. ஆயா ஆய் போன யாருடா கழுவி விடுவாங்க??"
"அவகளுக்கு எல்லாம் ஹெட் மிஸ் கழுவுவாங்கடா..."

எனக்கும் இப்படிஎல்லாம் சந்தேகங்கள் வந்ததுண்டு...
நமக்கு டாக்டர் வைத்தியம் பார்க்கிறார், அவருக்கு ஏதும் வந்தால் வேறு நல்ல டாக்டர் இடம் செல்வாரா? நமக்கு அளவு எடுக்கும் தையல்காறர்க்கு யார் அளவு எடுப்பார்கள்? இப்படி பல... ஆனால், எங்கள் ஊர் சலூன் காரர் தனக்கு எப்படி கிட்டிங் செய்வார் என்று சந்தேகமே வந்ததில்லை...

ஐந்தடி இரண்டு அங்குல உயரத்தில் இரண்டு அங்குலம் அவரின் வழுகை பளீரிடும். இன்று வரை அவரின் பெயர் எனக்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். என்ன ராசியோ, அவருக்கும் பைரவனுக்கும் ஆகாது. தெருவில் நடந்து செல்லும்பொழுது எபோழுதும் கையில் நாய் விரட்ட ஒரு குச்சி இருக்கும், மந்திரகோல் போல.

முடிவெட்ட அமர்த்தும், நம் மீது ஒரு வெள்ளை துணி படரும், அதன் இரு நுனிகள் நம் பின்னங்கழுத்தில் முடிசிடுவதர்க்கு முன், சட்டை காலரை பின்னோக்கி இழுக்கும்போதுதான் நம் சட்டையின் முதல் பொத்தானை அவர் கழட்டியது தெரியும்.

சர்பத்தின் சீறலுடன் வெளிவரும் நீர் துளிகளால் (கோடை காலத்தில் அதன் சுகமே தனி!!) தலை முடி முழுக்க நினைத்து பின் அழகாக சீவிவிடுவார். அவரின் தழுவலுக்கு அடங்கி முடிகற்றைகள் அழகான வடிவத்திற்கு வந்துவிடும், அதை பார்த்தபின் இதுவே போதும் என்று எண்ண தோன்றும். அந்த சமயத்தில்தான் நமகே நமக்கு மட்டும் கேட்கும் வண்ணம் 'எப்படி வேணும்?' என்பார்.

அவர் தலையை ஒத்தவர்கள் வந்தால், அவர் கண்களில் ஒரு குதுகலம் படர்வதை உற்று பார்த்தல் காணலாம்.
அப்படியான ஒருவர் "என்னப்பா, இந்த தலைக்கும் இருவத்தஞ்சு ருவா தானா?"
"அதுவே கம்மி, தேடி தேடி வெட்ரோம்ல..." என்று குசும்புடன் பதில் வரும்.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்று நினைக்கிறேன். 'சிவாஜி' படத்தை வெள்ளித்திரையில் பார்பதற்காக ஊரே காத்துகொண்டிருந்த ஒரு நாள். மாலையின் ஆரம்ப நிமிடங்களில் அவரின் கடைக்கு சென்றேன். அந்த நேரத்திலேயே புறப்பட ஆயதமாகிகொண்டிருந்தார்!! என்னை பார்த்ததும் கொஞ்சம் யோசனையுடன் "ஒரு கல்யாணத்துக்கு போகணும், கடைய மூடலாம்னு..." என்று இழுத்தவர் "சரி உக்காருங்க, முடிச்சுட்டே போலாம்"

என முடியை சிதரடிதுகொண்டே பேசினார் "நாளைக்கு நம்ம மச்சுனனுக்கு கல்யாணம். மாமன் நானே லேட்டா போன சொந்தகாரங்க ஏதும் பேசுவாக. அதன் நேரத்துலையே போலாம்னு... நம்ம போய் ஏதும் பண்ணவேண்டாம்... இருந்தாலும் நாம இருந்த ஒரு மரியாதை ..." இப்படியாக அந்த அவசரத்திலும், அவசரம் இல்லாமல் என சிரசை சீர் செய்தார்.

பேச்சும் வேலையும் முடிததும் எபோதும் போல இருபத்தைந்தை நீட்டினேன். வாங்கி வைத்துகொண்டவர், "இபோ இது போதும், அடுத்ததடவைல இருந்து முப்பது குடுங்க, வேலை எல்லாம் ஏறிடுசுங்க.."
"அதுகென்னங்க, இப்பவே முப்பதா வாங்கிக்கங்க, அஞ்சு ரூபால என்ன ஆயிடபோகுது!!"
"பரவால அடுத்த டைம் பாத்துக்கலாம்"
...இப்படி இருவரும் சில பரவாயில்லை பரிமாற்றத்திற்கு பிறகு சங்கடத்துடன் அவர் பெற்றுக்கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு பின், திருமணம் முடிந்து மண்டபத்திலேயே ஹார்ட் அட்டாக் இல் அவர் இறந்துவிட்ட செய்தி வந்தது.

இன்று அவர் கடையை அவரின் மைத்துனன் நடத்துகின்றார். கடையில், ஒரு ஓரத்தில், சிறிய விளக்கு வெளிச்சத்தில் மாலையுடன் புகைப்படமாய் அவரை பார்க்க மனதை ஏதோ அழுத்துவதால் அங்கு போவதில்லை.