டெய்லி வரிகள்...

03/08/2010
 

இன்றைக்கு தினமலர் நாளிதழில் ஒரு பெட்டி செய்தி. கருணாநிதி பத்திரிகைகள் மீது பாய்ச்சல் என்ற தலைப்பில். அதில் கடைசி பத்தியை மட்டும் இங்கு தருகிறேன்.

"..........சி., மைதானத்தில் கூட்டம் நடத்த பலரும் பயந்து கொண்டிருந்தபோது, முதல் முதலாக ராஜீவ்காந்தி பங்கேற்ற கூட்டம்தான் இங்கே நடத்தப்பட்டது. அப்போதே 5000 ருபாய் வாடகைக்கு இருந்தபோதே, இங்கே கூட்டம் நடத்தி, அதில் முதன் முதலாக பேசியவன் இந்த கருணாநிதி. ..சி., இழுத்த செக்கு காணாமல் போன பொது, அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை கண்டு பிடித்து கிண்டியில் காட்சிக்கு வைத்தவன் நான்.........."

சம்பந்தமே இல்லாமல் உணர்சிகரமாக பேசுபவர்கள் அரசியல்வாதிகள் என்று மீண்டும் நிருபித்துள்ளார். ..சி. மைதனதிர்க்கும், ..சி. இழுத்த செக்கு காணாமல் போனதிற்க்கும் இருக்கும் சம்பந்தம் ; போபாண்டவற்கும் பழனி ஆண்டவர்க்கும் இருக்கும் சம்பந்தம் தான் என்று, half bottel லும், பிரயாணி பொட்டலமும் வாங்கிகொண்டு வந்த தொண்டர்கள் எத்தனைபேர்க்கு புரிந்திருக்கும்!!!

02.08.2010

உங்களுக்கு தும்கூர் (tumkur) தெரியுமா? கர்நாடகவில் உள்ள ஒரு ஊர்.. துமாகஊர் என்று சொல்வார்கள். கன்னடத்தில் (தெலுங்கில் கூட!) 'துமுக்கு' என்பது குதிப்பது என்று பொருள். இராமாயணத்தில் மாரீசன், மாய மானாக சீதாவின் குதித்தோடியது இந்த இடத்திலதான், அதனால் தன இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்ததாக சொல்கிறார்கள்!! இன்னும் கூட இந்த ஊரின் காடுகளில் வந்தபாதையை திரும்பி பார்த்தல் பாதையே இல்லாதது போல மாய தோற்றங்கள் தோன்றுவதாக சொல்கிறார்கள்!!! உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுகளேன்........

26/07/2010 

இன்று காலை குழந்தையுடன் அம்மா வீடிற்கு சென்றேன்.. உள்ளே நுழைந்ததும் குழந்தை குதூகலத்துடன் '..ய்யா' என்று கத்தினால்... அவள் கத்தலை கேட்டு அவளின் தாத்தாவும், துணி துவைத்துகொண்டிருந்த சலவைகாரம்மாவும் அதே போல் '..ய்யா' என்று கத்தினார்கள்!! அவர்கள் முகத்திலும் அதே குதூகலம்..
இந்த கத்தலையும் சந்தோசத்தையும் குழந்தைகளால் மட்டுமே குடுக்க முடியும்!!!

எல்லாவற்றையும் சந்தோசமாக பார்க்க அவர்களால் மட்டுமே முடியும்!! அர்த்தமற்றவைகளை கூட அவர்க்கு சிரிப்புதான்...

அவளின் பொம்மை வாத்தை அழுத்தினால் '..கை... கை...' என்று கத்தும்... அதில் ஒரு சந்தோஷம்!! அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்று நானும் அதை '...கை... கை... கை...' என்று அழுத்தி பார்த்தேன்... ஏதோ சந்தோஷம் வரும் போலதான் இருந்தது!! சந்தோசத்தின் வெளிப்பாடாக அவள் போல '...ய்ய்ய்யாயா..' என்று கத்தினேன்.... நன்றாகதான் இருந்தது...

புரியாமல் மிரட்சியுன் என்னையே உற்று பார்த்த மனைவி, என்னை கடக்கையில் "நேத்து தானே பௌர்ணமி!!" என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது!!! 


20/07/2010

சுஜாதாவின் 'கணையாழி கடைசிப் பக்கங்கள்' லின் தொகுப்பை படித்துக்கொண்டிருகிறேன். கவிதைகளுக்காக நிறைய கவலைபடுகிறார். அது போக சுவாரஸ்யங்கள் நிறைய இருக்கிறது. நக்கல்களும் ஆங்காங்கே. உதாரணதிற்கு ஒன்று.
"என நண்பர் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்துகொண்டுவிட்டான். கோத்ரேஜ் அலமாரி, அப்புறம் ரேடியோ, ரெப்ரெஜிரேடர்,டெர்லின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்யாணம் பண்ணிகொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!"

22/07/2010

"சார், ritz கார் நல்ல இருக்குனு சொல்றாங்க, swift என்ஜின்னாம், ஓட்ரக்கு ஜம்னு இருக்காம்!"
"........ம்ம்......"
"அங்க போகுது பாருங்க, நல்லாதானே இருக்கு!?"
"அதோட back பாருங்க சார், ஆய் உக்காந்துட்டு கழுவாம காலை அகட்டிட்டு ஓடரமாறி இருக்கும்!!"
"............"
"................."
"swift?!"
"அது ஒரு பொம்பள புள்ள அப்படி ஓடரமாறி இருக்கும்!!!"
"போங்க சார்"
"இப்போ நாம போயிட்டு இருக்கோமே, avitator! பின்னாடி உகந்துட்டு வர்ற எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? western toilet உகாந்துட்டு வர்ரமாரி இருக்கு!!!"
"என்ன சார், சுத்த ஆய் பைய்யனா இருக்கீங்க!!!"