புரிந்துகொள்ள மிக சுலபமானது கர்மயோகம், அதேவேலையில் மிக மிக சிரத்தையானது கர்மயோகியாக வாழ்வது.
இக்காலகட்டத்திற்கு கர்மயோகம் சிறந்தது என்பேன்.
பாற்கடல் விஷ்ணுவும், இடுகாட்டு சிவனும் கர்மயோகத்தின் அடையாளங்களே.
நம் செயல்கள் யாவும் நம்மால் செய்யபடுவதில்லை, நாம் வெறும் கருவிகளே. நம் செயல்கள் எப்படி நம்முடையதில்லையோ அதே போல் அச்செயல்களால் வரும் இன்ப துன்பகள், நன்மை தீமைகள் நம் மனதை தீண்டாதிருக்கசெய்வதே கர்மயோகம்...
இதை தான் கீதையில் 'நானே செய்கிறேன்... நானே எல்லாம்.... ' என்று அர்ஜுனனிடம் அடிக்கடி கிருஷ்ணபரமாத்மா சொல்கிறார்...
கீதா சாரம் என்று எல்லா கடைகளில் (finance company உட்பட) ஒட்டி வைகிறார்கள்...
காவி மட்டும் கட்டிய சாமியார் முதல் வாயில் லிங்கம் எடுக்கும் சாமியார்வரை சொல்கிறார்கள்... (சொல்ல மட்டும் தான் செய்கிறார்கள்...)
A.R.ரகுமான் ஆஸ்கார் மேடையில் 'எல்லா புகழும் இறைவனுகே...' என்கிறார்...
பன்னிரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு தாத்தா சொன்னார், 'நம்ம கைல என்னபா இருக்கு, எல்லாம் ஆண்டவன் தந்தது....'
இவை அனைத்தையும் நாம் கேட்க மட்டும் செய்கிறோம், அதை சிந்திப்பதே இல்லை...
ஒருமுறை யமுனையின் மறுகரையில் வியாசர் வந்து தங்கியிருந்தார்.
கிருஷ்ணனே போற்றி வணங்கும் அம்மகரிஷியை தரிசிக்க கோபியர்கள் விரும்பினார்கள்.
பெரியவரை காணச்செல்வதால், பழங்களையும் சில பலகாரங்களையும் சமைத்து எடுத்துச்சென்றனர்.
அக்கறை சென்ற கோபியர், வியாசரை தொழுது, ஆசிபெற்று தாங்கள் கொண்டுவந்ததை நைவேதியமாக எடுத்துக்கொள்ள வேண்டினர்.
அவர் உண்ட மிச்சத்தை பிரசாதமாக எடுத்து செல்ல நினைத்திருந்த கோபியர்களுக்கு, ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாபிட்டுவிட்டார் வியாசர்.
பாவம், மனிதருக்கு மிகுந்த பசி போல என்று நினைத்துக்கொண்டு அவரிடம் விடைபெற்று புறப்பட்டனர். அப்போது யமுனையில் வெள்ளம் சீற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்ததை கண்டு, வியாசரிடம் தங்களை மறுகரைக்கு செல்ல உதவுமாறு வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலை ஏற்று, யமுனையை நோக்கி "நான் இன்று ஒரு துளி நீர் கூட அருந்தாது உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனையே இவர்களுக்கு வழி விடு..." என்றார்...
யமுனையும் வழிவிட்டது....!!!!
வியப்புடனே நதியை கடந்த கோபியர், கண்ணன்னிடம் சென்று நடந்ததை சொல்லி , எப்படி இது நிகழ்ந்தது என்று வினாவினர்.
கண்ணன், "உண்ட உணவு யாவுமே, கிருஷ்ணா! உனக்கே அர்ப்பணம் என்று உள்ளத்தளவில் அவர் அர்ப்பணித்ததால், அதன் ருசி கூட அவர் நாவை தீண்டாது என்னை வந்தடைந்தது, எனவே அவர் உபவாசம் இருந்தது உண்மையாயிற்று" என்றான்.
இத்தனை ஆத்மார்த்தமாக நம்மால் இருக்க இயலுமானால், நாமும் கர்ம யோகிதான்..
இன்னும் கர்மயோகத்தை போதிக்கும் இதிகாச நிகழ்ச்சிகள் பல உண்டு, அவ்வப்போது சொல்கிறேன்..

September 2, 2009 at 10:36 AM
// பன்னிரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு தாத்தா சொன்னார், 'நம்ம கைல என்னபா இருக்கு, எல்லாம் ஆண்டவன் தந்தது....' //
நிதர்சனம். நாவிலிருந்து வரும் வார்த்தைகள்.
சில நேரம் இதயத்திலிருந்து.
அறிவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் உதிர்ப்பவனுக்கு கர்மயோகம் கட்டுப்படும்.
//இன்னும் கர்மயோகத்தை போதிக்கும் இதிகாச நிகழ்ச்சிகள் பல உண்டு, அவ்வப்போது சொல்கிறேன்..//
நிறைய சொல்லுங்கள்.
உங்கள் அறிமுகமே ("about me") உங்களைப் பற்றிச் எடுத்துரைக்கிறது
அன்புடன்,
ஷக்தி