கடவுளை தேடி... -4

தற்போது இருக்கும் விஞ்ஞான வளர்சிகள் சற்றும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலத்தில் நாம் இருபதாக கற்பனை செய்துகொள்வோம்....
தற்போது நீங்களும், நானும் நண்பர்கள்... இயற்கையை மட்டுமே நமக்கு தெரியும்.. நாம் இருவரும், ஒரு சிறு குன்றின் மீது வேட்டையாட செல்கிறோம்... உணவை தேடி இருவரும் பிரிந்து செல்கின்றோம்....
நான் மலையின் உச்சிக்கு சென்றுவிட்டேன்....

அங்கு ஒரு பறக்கும் வாகனம் ஒன்று வந்து இறங்குகிறது - நாமே இன்று புதியதாக ஒரு கிரகத்திற்கு சென்றோமானால் தரை இறங்க பொதுவான எச்சரிக்கை காரணமாக மேடான பகுதியைதான் தேர்ந்தெடுப்போம். அப்படியாக வந்து இறங்கிய அந்த வாகனதில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைகவசம், மற்றும் கையில் ஏதோ நீளமான ஒரு கொள், ஏதேனும் தொலைதொடர்பு சாதனமாகவும் இருக்கலாம், அல்லது ஆயுதம். தலைகவசதிலும், உடல் கவசத்திலும் சில ஒளி அமைப்புகள். வந்தார்கள்... சுற்றி பார்த்தார்கள்... சென்றார்.....

பார்த்த எனக்கு பெரும் பிரம்மிப்பு... அதுவரை அப்படி ஒரு பறக்கும் வாகனத்தை நான் இதுவரை கண்டதில்லை... வாகனம் என்ற வார்த்தைக்கூட பொருள் தெரியாது... இடியோசையொடும் மின்னல்  போன்ற ஒளியோடும்   வந்தது அப்படியே சென்றுவிட்டது....

அரவம் கேட்டு நீங்களும் குன்றின் உச்சிக்கு வருகிறீர்கள்... என்ன நடந்தது என்று கேட்கிறீர்கள்...

''ஏதோ ஒன்று வானத்தில் இருந்து பெரிதாக பறந்து வந்தது'' 
''பறவையா?"
"பறவை போல ஒன்று.... ஆனால், பெரியது...."
"பெரிய பறவையா?.... மயில் போல???"
"ம்ம்ம்.... அப்படிதான்... அதில் மனிதர்கள் வந்தார்கள்"
"நம்மை போலவா?"
"இல்லை.... பிரகாசமாய்.... கையில் ஏதோ.... ஈட்டி போல...."
"நம் ஈட்டி போலவா?"
"இல்லை.... அதுவும் பிரகாசமாக இருந்தது...."
"ம்ம்...."
"தலையில் ஏதோ அணிதிருந்தர்கள்...."
"ஒ...."
"பிறகு மீண்டும் பறந்து சென்றுவிட்டார்கள்...."
.....

விஷயம் நாம் வாழும் கிராமத்தில் பரவுகிறது..... அங்குள்ள ஒரு பெரியவர், வந்தவர்கள் தெய்வங்கள் என்கிறார்..... செவிவழியாகவே கலங்கலாய் வலிமொளியபடுகிறது.... அந்த குன்றின் உச்சியில் தெய்வம் வந்து சென்றதால் புனிதமாக கருதபடுகிறது.... வந்து சென்ற இடதில் பூஜைகள் நடக்கிறது.... காலங்கள் கடந்து.... செவிவழி செய்தி காலத்திற்கும் சொல்ல படும் மனிதருக்கும் ஏற்ப திரிந்து, வான் ஊர்தி மயில் ஆகவும், வந்த தெய்வம் முருகன்னாகவும் அந்த குன்று பழனி என்றும் ஆகி இருக்கலாம்....

இது அதீத கற்பனை என்று நீங்கள் நினைக்கலாம்.... ஆனால், இவை நிஜமாக இருக்கும்பச்சதில் நமது இத்தனைநாள் புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் வேறு ஒரு கோணம் புலப்படும்.....

இப்படி ஒரு கோணத்தை பெரும்பாலானவர்கள் ஜீரணிக்கவே முடிவதில்லை.... ஆதலால், இதை மொத்தமாக புறக்கணிக்கலாம்....

கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வாங்குபவர்களுக்கு என் எழுதுக்கள் முட்டால்தனமாக படலம்..... இதுவரை சொன்னது ஒரு சின்ன உதாரணம்தான்... இன்னும்.....

தேடுதல் தொடரும்....


0 Response to "கடவுளை தேடி... -4"

Post a Comment