................
'நீ எம்பிடு பெத்தே?' என்றால் சணப்பி.
'ஆருக்கு கணக்கிருக்கு. எனக்கு மொகம்கூட ஒர்மயில்ல அக்கா. இன்னி ஆரயும் பாத்தாலும் கண்டுபிடிக்க ஒக்காது' என்றால் முத்தம்மை, 'முதல் குட்டிய மட்டும் நல்ல ஒர்மையிருக்கு அக்கா. அது எனக்கு கேறுமிண்ணு நாள் சொப்பனத்திலயும் நெனைக்கில்ல. அப்பம் எனக்கு பதினாறு வயசாக்கும். வயறு கேறி வீக்குயது வரை எனக்கு நம்பிக்கை வரேல்ல. பிரவு ஊணும் இல்ல உறக்கமும் இல்ல. எப்பம் பாத்தாலும் சொப்பனம். பின்ன கரைச்சில் சிரிப்பு. எனக்க அக்கோ, மத்து கேறிப் போச்சுன்னு சொன்னா போருமே. பத்து மாசம் தரையிலயா நிண்ணேன்? பிறவு பிள்ளை பொறந்து வயத்தாட்டி தூக்கி காட்டிணப்பம் எனக்கு சங்கு பொடிட்டிப் போச்சு அக்கா'
'ஏன் உன்னைய மாதிரி இருந்ததோ?'
'எனக்கெங்கிலும் கண்ணு உண்டும். ஒரு கை உண்டும். சோறு இருக்க இடம் பாத்து வாரிதிங்க ஆறுக்க சகாயமும் வெண்டாம். அது ஒரு வரதுல்லா. கண்ணில்லா. கையிலயும் காலிலயும் ஓரோ விரலு மட்டும்தான். கூனுமுண்டு. மாறிலயும் வயதிலையும் அடிச்சுட்டில்ல கரைஞ்சேன். பிடிச்சு அமுக்கி கொல்லணுமுண்ணு நெனைக்கேன். கொரவளையில கைய வச்சா கை அமுங்காது. அய்யோ, எனக்க மக்களேன்னு கெடந்து நெலவிளிச்சேன். ஆப்பூன்னு ஒருத்தன் இருந்தான். அவன் கம்பி எடுத்து அடிச்சான். இப்பமும் சங்கில நிக்குதக்கா பிள்ளை சரீரம். எம்பிட்டு மட்டம் தடவி பாத்தேன். பத்து மட்டம் தடவினா கை வளராதாணு நெனச்சேன் அக்கா. கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தக்கை வெரலு...'
'கொல்ல ஒக்குமோ?' என்றாள் சணப்பி.
'பிள்ளைய வெறுக்கமுடியாது அக்கா. வெறுக்கலாம். அது நம்ம முலைகண்ணில வாய வச்சா பிறவு வெறுக்க ஒக்காது. முலை குடிக்கும்பம் கடிச்சா வலிக்கும் பாத்துக்கோ. அப்பம் அது நம்மகிட்ட என்னமோ சொல்லுயது மாதிரி இருக்கும். அம்மாண்ணூவிளிக்கது மாதிரி. அதுக்கும் பிறவு நம்ம பிள்ளைய வெறுக்கமுடியாது. எனக்க பொன்னு அக்கோ.'
சணப்பி 'உனக்கு அந்த பெயல பாத்தா தெரியுமாட்டி?'
'அதுக்கு இப்பம் பதினெட்டு வயசிருக்கும்லா. எனக்க கண்ணில நிக்குதது அதுக்க சின்ன சரீரமாகும். ஒரு வயசிலயில்லா வெலை குடுத்து தூக்கிட்டு போனாவ. எனக்க பிள்ளியள ஒண்ணையும் பிறவு நான் கண்ணால பாத்திட்டில்ல. ஏழெண்ணம் பொண்ணாக்கும். ஒண்ணையும் நான் கண்டிட்டில்ல. ஆனா ஒன்னு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன். எனக்க பிள்ளைய தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்...'
'உனக்கு நல்ல குட்டி பிறந்திட்டுண்டா?'
'எங்கேண்ணு பிறக்கும்? எப்பமும் வல்ல குருடோ கூனோ தானே அணையவிடுதாக?'
'அதுக்குமொரு யோகம் வேணுமே...'
...................
பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்துவிட்டதலோ என்னவோ, இந்த கதை அதிகம் அழுத்தவில்லை, ஆனாலும் என்னை கீழே வைக்கவிடவில்லை. அந்த திரைபடத்தை பார்பதற்கு முன்பே இதை படித்திருந்தால் நிச்சயம் என் தூக்கத்தை கேடுத்திருக்கும்.
என்னை முதலில் படிக்கவைத்த பெருமை ராஜேஷ்குமார்ஐ சேரும். கதைகளின் தலைப்பே விகாரமாய் இருக்கும் - 'பஞ்ச வர்ண கொலைகள்', 'கொலை கொலையா முந்திரிக்க'. அவரின் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக அலுக்க ஆரம்பித்தது -இப்போது என blog ஐ போல. ஆரம்ப அத்யாயங்களிலையே முடிவு ஊகிக்க முடிந்தது. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரன் இவர்களும் அப்படியே. பின்னர் சுஜாதா. சுஜாதாவின் கதைகள் எனக்கு அலுப்பு தட்டியதில்லை, ஒவ்வோவுன்றும் ஒவ்வொரு தலத்தில் இருக்கும். முன்னவர்களின் அளவிற்கு அவர் நாவல்களை எழுதி குவிக்கவில்லை.
பாலகுமாரன், நாவல்களை எனக்கு வேறு ஒரு பரிமாணத்தில் தந்தவர். 'மெர்குரி பூக்கள்'லில் இருந்து அவரின் கதைகளை தேடி தேடி படித்தேன். அதுவும், மகாபாரதம் தழுவிய கதைகள் அருமை. அந்த காலகட்டங்களில் கையில் பாலகுமாரன் புத்தகம் இருந்தாலே பெருமையாய் பார்பார்கள்!!! 'கண்மணி தாமரை' ஐ மாய்ந்து மாய்ந்து படித்தேன். அதில் அவர் 'எழுத்து சித்தார்' ஆனபின் அவரின் பக்கமே போவதில்லை.
இந்திரா சௌந்தராஜனின் 'கிருஷ்ணா தாசி' தவறாமல் படிக்கவேண்டிய நாவல். பின்னர் சமூக கதைகளில் இருந்து விலகி அவரின் முதல் மர்ம நாவல், உண்மையிலேயே மர்மமான நாவல்தான். கதையின் வரும் கொலைகளுக்கு காரணமானவர் யார் என்று கண்டுபிடித்தால் நூறு ருபாய் பரிசு என்று அறிவித்திருந்தார். விடை அடுத்த மாத நாவலில் என்று கதையின் முடிவை சொல்லமலே முடித்திருந்தார். நான் அந்த நாவலை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில்!! இன்று வரை அந்த கதையின் முடிவே தெரியாது!!! 'விட்டுவிடு கருப்பா', 'ஆயரம் வேலி நிலம்' மற்றும் சில நாவல்களுடன் அவரையும் நிறுத்திவிட்டேன்.
ஜெயமோகன், ஆதவன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இன்னும் இன்னும்... இவர்களின் எல்லாமே அருமை என்று சொல்லமாட்டேன். தேடி படிக்கவேண்டும்.
கதைகளின் நடை அழகாக இருந்தால் போதும், வெகு சாதாரண கருவை வைத்து கூட புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் செய்யலாம். அதற்க்கும் சுஜாதாவையே உதாரணம் சொல்லலாம், அவரின் கதைகளை படித்தவர்களுக்கு அது புரியும்.
கதைகளை பற்றி பேசும்போது, என்னை பாதித்த கதைகளில் ஒரு முக்கியமான கதை "அணையா நெருப்பு" என்ற சிறுகதை. மிக மிக வித்தியாசமான கதை. அதுவும் எதிர்பாராத ஒருவர் எழுதிய கதை. அந்த கதை படித்தபின் அவரின் மீது இருந்த மரியாதை பல மடங்கு உயர்ந்துவிட்டது. அவர் நடிகர் கமல்ஹாசன். 28.05.2006, ஆனந்த விகடன் இல் வெளிவந்தது.
June 15, 2011 at 4:38 AM
Touching story by Jayamohan... Nice post...