கடவுளை தேடி... -2

கிருஷ்ணர் மற்றும் சால்வனுக்கும் இடையில் நடந்த யுத்தம்மும் அதிநவீன யுத்தம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்..

சால்வனின் வாகனத்தை பற்றிய வர்ணனையில், அது ஒரு பறக்கும் வாகனம் என்றும், ஒரு இடத்தை தாக்கிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு இடத்தை தாக்கியதாகவும், அது மின்னல் போன்று அதீத வெளிச்சத்துடனும், இடியோசை போன்ற சதத்துடனும் தாக்கியதாகவும் புராணங்களில் உள்ளது. அதை கொண்டு துவாரகையின் பல மாட மாளிகைகளை சல்வன் தரைமட்டமாக்கினான்.

இதில் வரும் வர்ணனை இப்போது புதிராக இருக்கும் பறக்கும் தட்டை ஒத்திருக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் இங்கும் அங்கும் செல்வது, அந்த வாகனம் ஒளியின் வேகத்தில் பயணித்தை காட்டுகிறது.

சல்வனை, கிருஷ்ணர் சக்திவாய்ந்த அம்புகளை தாக்கி அழித்ததாக சொல்வது, ஏவுகனையோ, 'ராக்கெட்லாஞ்சர்' - ரோ கூட இருக்கலாம்.

துவாரகை

குஜராத் அருகில், கடலில் எழுபது அடி ஆழத்திலேயே துவாரகையின் மிச்சங்களை சமீபத்தில் அகல்வாராச்சியில் கண்டெடுத்திருகிறார்கள். ஆராய்சியாளர்களின் கூற்றுப்படி, துவாரகை எனும் நகரம் 32000 வருடங்களுக்கு முன்பு உருவானதாகவும், 9000 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்கலம் என்றும் சொல்கிறார்கள். அப்படியெனில் மகாபாரதகாலம் என்பது எப்போது?!

மகாபாரதம் என்பது வெறும் கதை என்பவர்கள் கவனத்திற்கு. அது வெறுமையாய் ஞாயிறுகிழமைகளில் தொலைக்காட்சி தொடர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல. அவை அனைத்தும் நிஜத்தில் நிகழ்தவைகள். வெகுகாலமாய் செவிவழியாகவே சொல்லப்பட்டதால் சில திரிபுகள் இருக்கலாம் அன்றி எவையும் மிகையல்ல.

என அறிவிற்கு எட்டியவரை, முதல் சோதனை குழாய் குழந்தை, துரியோதனன். முதல் க்ளோனிங் குழந்தை விநாயகர், முதல் சிரசுமாற்று அறுவைசிகிச்சைக்கு உட்பட்டவரும் அவரே. கர்ணன், மற்றும் பஞ்சபாண்டவர்களின் பிறப்பு இன்னும் அறிவிற்கு எட்டாதவைகளில் ஒன்றே அன்றி பொய் அல்ல.

இன்றைய விஞ்ஞானம் ஒப்புகொள்ளும் விஷயம், ராமாயண மகாபாரதத்தில் சொல்லப்பட்ட 'பிரமாஸ்திரம்' இன்றைய அணுகுண்டே. அணுகுண்டு வெடிப்பில் நிகழும் கதிர்வீச்சால் பாதிக்கபடவர்களின் முடிகொட்டிவிடும், நகங்கள் விழும் போன்ற நுணுக்கமான விஷயங்கள் கூட பிரமாஸ்திரம் பற்றிய குறிப்பில் உள்ளது. மகாபாரதத்தில் இந்த பிரமாஸ்திரம் உபயோகித்ததாக குறிப்பு உள்ளது.

இந்து சமவெளியில், 1922ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட , இறந்தவர்களின் மேடு என்று பொருள்கொண்ட 'மொஹென்ஜோடரோ'வை 1979ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய விஞ்ஞானி ஆராய்ததில், அங்கு கதிர்வீச்சின் அளவு சாதாரண அளவைவிட அதிகமாக இருப்பதை கண்டுபிடித்தார். மற்றும் சில பாறைபடிவங்கள் கண்ணாடி போல் இருந்ததையும் கண்டார். மிக பெரும் வெப்பத்தால் மட்டுமே பாறை மற்றும் மணல் கூட உருகி பின் குளிர்விக்கபடும்போது அவை இப்படி கண்ணாடி போன்று உருமாறும். 1945-இல் மெக்சிகோவில் முதல் அணுகுண்டு சோதனை செய்தபோது, வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், மணல் கூட இப்படி கண்ணாடி போல் ஆனதைகண்டனர்.

அப்படியானால், மொஹென்ஜோடரோவில் நிகழ்ந்தது என்ன? அதனை கண்டுபிடித்தபோது, அதன் சாலைகளில் 40மனித எலும்புகூடுகள் ஒன்றை ஒன்று கைகோர்த்தபடி கிடந்தனவே, அவர்களின் மரணம் நிகழ்ந்தது எப்படி!? மகாபாரதயுத்தம் நடந்த இடங்களில் ஒன்றா அது??

"அப்போது, மகாவிஷ்ணு, பரமேஸ்வரன் எல்லாம் வேற்றுகிரகவாசிகள் என்று சொல்கிறாயா?" என்று என்னை யாரேனும் கேட்டால், ஆம் என்று சொல்வதற்கான வாய்புகள்தான் அதிகம் என்பேன்...

அப்படியானால் கடவுள் என்பது??

தேடுதல் தொடரும்....